சென்னைக்கு நோ - பெங்களூருவில் பைனல்

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் பைனல், மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. சென்னையில் நடக்க இருந்த நான்கு போட்டிகளும் இடம் மாறின.

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில், பல்வேறு போட்டிகள் திட்டமிட்ட இடங்களில் இருந்து வேறிடங்களுக்கு மாற்றப்படுகின்றன. 

காலரி தொடர்பான பிரச்னை தீராத நிலையில், சென்னையில் மே 18 (சென்னை–பெங்களூரு), மே 22ல் (சென்னை–ஐதராபாத்), நடக்க இருந்த லீக் போட்டிகள் ராஞ்சிக்கு மாற்றப்பட்டன.

தவிர, மே 27, 28ல் சென்னையில் நடக்க இருந்த இரண்டு ‘பிளே ஆப்’ போட்டிகளும் (‘தகுதி சுற்று 1’, ‘எலிமினேட்டர்’ ), கோல்கட்டா, மும்பை (பிரபோர்ன்) மைதானங்களுக்கு மாற்றப்பட்டன. 


பைனலும் மாற்றம்:

இதேபோல, மும்பை வான்கடே மைதானத்தில் ஜூன் 1ல் நடக்க இருந்த பைனலை, பெங்களூரு சின்னச்சாமி மைதானத்துக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு மாற்றியது.


காரணம் என்ன:   

கடந்த மே 3ல் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது சில சிக்கல்கள் ஏற்பட்டது. அடுத்து மே 6ல், மும்பை–பெங்களூரு அணிகள் மோதிய போது, வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் பெரும் கூச்சலிட்டனர்.

தவிர, கடந்த 2011ல் உலக கோப்பை பைனல் நடந்த போதும், மும்பை கிரிக்கெட் சங்கம், டிக்கெட் விற்பனை உட்பட பல விஷயங்களில் குளறுபடிகள் செய்தது.

இருப்பினும், தற்காலிகமாக ஒதுங்கிய பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனுடன், மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) மோதலில் ஈடுபட்டதே, பைனல் மாற்றப்பட்டதற்கு காரணம் என, கூறப்படுகிறது. 

0 comments:

Post a Comment