ஐ.சி.சி.,க்கு திறமை இல்லை - மெக்கலம் வக்கீல் தாக்கு

சூதாட்டம் குறித்து தெரிவித்த போதும், போதிய நடவடிக்கை எடுக்கும் திறமை ஐ.சி.சி.,க்கு இல்லை,’’ என, பிரண்டன் மெக்கலத்தின் வக்கீல் கரேத் கலோவே தெரிவித்தார்.  

கடந்த 2008ல் இந்தியாவில் முதல் ஐ.பி.எல்., தொடர் நடந்தது. இதில் கோல்கட்டா அணிக்காக பங்கேற்றார் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம்.

அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட இவரிடம் ஒருவர் அணுகியதாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) மெக்கலம், வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
இத்தகவல், இங்கிலாந்து ‘மீடியாவில்’ வெளியானது. இதுகுறித்து மெக்கலம் வக்கீல் கரேத் கலோவே கூறியது:

சூதாட்டம் குறித்த தகவல்களை, வீரர்கள் வெளிப்படையாக, தானாக முன்வந்து வாக்குமூலம் கொடுக்கவேண்டும் என்று ஐ.சி.சி., எதிர்பார்க்கிறது. கடைசியில் இந்த தகவல்கள் ‘மீடியாவில்’ வந்து விடுகிறது.

சூதாட்ட விஷயத்தில் போதிய நடவடிக்கை எடுக்கும் திறமை ஐ.சி.சி.,க்கு இல்லை என்று தான் நினைக்கிறேன். மெக்கலம் வாக்குமூலம் வெளியானது தொடர்பாக, தொடர்ந்து அமைதி காக்கிறது. இது வெட்கக்கேடான செயல்.

இதனால், சூதாட்டம் குறித்த விசாரணைகளை, விரைவில் நடத்தி முடிக்க வேண்டும்.

இவ்வாறு கரேத் கலோவே கூறினார்.

0 comments:

Post a Comment