IPL 7 அடுத்த சுற்று வாய்ப்பு யாருக்கு?

மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடி ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேற முயற்சிப்போம்,’’ என,  யுவராஜ் சிங் தெரிவித்தார்.      

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் பாதிக்கும் மேற்பட்ட லீக் போட்டிகள் முடிந்தவிட்டன. பஞ்சாப், சென்னை அணிகள் பங்கேற்ற 9 போட்டிகளில், தலா 7ல் வெற்றி பெற்று, 14 புள்ளிகளுடன் ‘பிளே ஆப்’ சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டன.       

மீதமுள்ள 5 போட்டிகளில் இந்த அணிகள் ஏதாவது ஒன்றில் வென்றால் கூட, அடுத்த சுற்றுக்கு சென்று விடும். இதேபோல, ராஜஸ்தான் அணி 9ல் 6 வெற்றியுடன், 12 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த அணி இன்னும் 2 வெற்றி பெற்றால் போதும்.       

இதனால், ‘டாப்–4’ இடத்தில் 3 இடங்கள் உறுதியான நிலையில், மீதமுள்ள ஒரு இடத்துக்கு கோல்கட்டா, ஐதராபாத், மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் போட்டியிடுகின்றன.       

டில்லி அணி (9 போட்டி, 2 வெற்றி, 4 புள்ளி) ஏறக்குறைய வெளியேறிவிட்டது.       
இதில் பெங்களூரு அணியை பொறுத்தவரையில் இதுவரை 9 போட்டிகளில் 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் மட்டும் தான் பெற்றுள்ளது. இதனால், இந்த அணி அடுத்து விளையாடும் 5 போட்டிகளிலும் அசத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.       

0 comments:

Post a Comment